பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

136


களுடனும் மாடல மறையோன் மூலம் இக்காதையில் கூறப்பட்டிருக்கிறது.

சேரன் செங்குட்டுவனுடைய முன்னோர்கள் மிகுந்த ஆற்றலும் பராக்கிரமும் கொண்டவர்கள் பெயரும் புகழும் வெற்றிகளும் மிக்கவர்கள் என்றும் அவர்களுடையசாதனைகள் மகத்தானது என்றும் அவற்றை விரித்துக் கூறி இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் மறைந்து விட்டனர். எனவே யாக்கை நிலையாமை கருதி பத்திரிைத் தெய்வத்திற்கான கோயிலை நிறுவி அதன் வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய வேண்டும். செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி வேண்டுகிறான்.

“கடல் கடம் பொறிந்த காவலாயினும்
விடர்ச்சிலை பொறித்த விறலோனாயினும்
நான் மறையாளன் செய்யுட்கொண்டு
மேல் நிலை உலகம் விடுத்தோனாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவனாயினும்
வன் சொல்யவனர் வளநாடாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோனாயினும்
மிகப்பெரும் தானையோடு இருஞ்செருவோட்டி
அகப்பா எறிந்த அருந்திறலாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து

மதுக் கொள் வேள்வி வேட்டோனாயினும்”

என்று பல திறம் படைத்த ஆற்றல் மிகுந்த சேர மன்னனின் முன்னோர்களை அடையாளம் குறித்துக் கூறுகிறது சிலப்பதிகாரப் பெருங்காப்பியம்.

கடல் கடந்து சென்று அங்கிருந்த தீவகத்தின் அரசனை வென்று, அங்கிருந்த கடப்ப மரமாகிய காவல் மரத்தைவெட்டி வெற்றிவாகை சூடிய ஒரு சேரமன்னன்.