பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

141


கொன்றபின் அன்றோ வெய்ய கொடுந்த துயர் குளிப்பது? என்றான்.

என்று இலக்குவன் விதியின் தன்மையையும் மீறி தங்கள் வினைகளைச் செய்து முடிக்க வேண்டிய கடமையை வலியுறுத்திக் கூறுகிறான் அதன் பின்னர் இராமன் தெளிவு பெற்று

"அவ்வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி,
இவ்வழி இனைய எண்ணின் ஏழைமைப் பாலது என்னா
வெவ்வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை

செவ்வழி உரிமையாவும் திருத்துவம் சிறுவ" என்றான்

என்பது கம்பன் பாடல்களாகும்.

நடந்ததை நினைந்து வருந்திக் கொண்டிருப்பது அறியாமையாகும். துன்பத்தால் ஏற்பட்ட கண்ணீரைத் துடைத்துக் கொள்வோம். நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வையான முறையில் திருத்தமாகச் செய்து முடிப்போம் என்று நம்பிக்கையுடன் இராமன் கூறியதைக் கம்பன் மிக அழகாகச் சுட்டிக்காட்டியள்ளதைக் காணலாம்.

பொது நெறியிலிருந்து மேலெழுந்து சிறப்பு நெறியில் செல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை மாடல மறையோன் மேலும் கூறுகிறான். "வேதங்களில் மன்னர்களுக்கென கூறப்பட்டுள்ள வேள்விகளை முதலில் நீ செய்ய வேண்டும். அதை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடலாகாது. இன்றிருப்போர் நாளையிருப்பது உறுதியில்லை. எனவே அந்த அறவேள்விகளை உடனே செய்யத் தொடங்குவாயாக! என்னும் கருத்துக்களை மன்னன் காதுகாளில் மாடலன் விதைத்தான் என்று சிலப்பதிகாக் காப்பியம் கூறுகிறது.

"வானவர் போற்றும் வழி நினக்களிக்கும்
நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல்வேள்வி நீ செயல் வேண்டும்
நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்