பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25. வரந்தரு காதையில்

இக்காதையில் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும், மதுரையின் ஆயர்குல மகளான மாதுரியும், கண்ணகி மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த காரணத்தால், கோவலனுக்கும் கண்ணகிக்கும் ஏற்பட்ட சூழ்வினை பற்றி கேள்விப்பட்டவுடன் ஆற்றாமல், உயிர் துறந்த பின்னர், வஞ்சி மாநகரில், அரட்டன் செட்டியின் இரட்டைக் குழந்தைகளாகத் தோன்றினர் என்றும், இடையர்குலத்து முதுமகள் மாதரி திருவனந்தபுரத்துத் திருமால் கோயில் அர்ர்சகருடைய மகளாகத் தோன்றி, கண்ணகி கோட்டத்தின் பிரதிட்டை விழாவில் கலந்து கொண்டனர் என்னும் செய்தியும் சேரன் செங்குட்டுவன், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவனது திருவருளாலே பிறந்து இப்பெரிய உலகினை விளக்க முறச்செய்த வேந்தனாகையால் நல்லோர்களது பிறந்த வரலாறுகளையெல்லாம் கேட்டறியும் வாய்ப்பினைப் பெற்றான் என்னும் செய்தியும் காணப்படுகிறது. நற்செய்கைகள் செய்தோர் நல்ல பலன்களை அடைவார்கள் என்னும் நெறிமுறைக் கேற்ப இவர்களுக்கு இப்பலன் கிட்டியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

கொய்ளர்க் குறிஞ்சிக் கோமான்றன் முன்
கடவுள் மங்கலங் காணிய வந்த
மடமொழி நல்லார் மாணிழை யோருள்
அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவருமன்றியும்
ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன்

சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்குளள்

எனக் காதை வரிகள் குறிப்பிகின்றன.

கண்ணகி சிலை பிரதிட்டை செய்யப்பட்டபோதுஅங்கு அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும், திருவனந்தபுரத்து அரவணைக் கிடக்கும் திருமால் கோவில் அர்ச்சகரின் மகளும் வந்திருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய