பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரந்தரு காதையில்

146


முற்பிறப்பை அறிந்து மாடல மறையோன் மன்னனுக்குக் கூறுகிறான்.

வஞ்சி மூதூர் மாநகர் மருங்கின்
பொற்கொடி தன் மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங்கரட்டன் செட்டி
மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின்
உடன்வயிற் றோராய் ஒருங்குடன் தோன்றினர்,
ஆயர் முது மகளாயிழை தன் மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்

சேடக்குடும்மியின் சிறுமகளாயினள்

என்றும்,

“ஆனேறூர்ந்தோன் அருளில் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்
செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும்

கையகத்தன போல் கண்டனையன்றே”

என்றும் மன்னனும் மற்றவர்களும் தவப் பயனால் அடைந்த பேற்றினை மாடல மறையோன் என்ற சிறந்த அறிஞன் வாயிலாக சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் சிறப்புறக் கூறுகிறது.

இக்காதையின் நிறைவாகவும் சிலப்பதிகாரப் பெருநூலின் பயன்பாடாகவும் அக்காப்பியத்தின் தெளிபொருளாக உள்ள அறங்களை இளங்கோவடிகள் உலகத்தாருக்குக் கூறி முடிப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

தெரிவுறக்கேட்ட திருத்தகு நல்லீர்
பரிவும் இடுக்கனும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின், புறஞ்சொற்போற்றுமின்,

ஊனூண் துறமின்இ உயிர்க்கொலை நீங்குமின்