பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

147


தானம் செய்ம்மின், தவம்பல தாங்குமின்
செய் நன்றி கொல்லன் மின், தீ நட்பிகழ்மின்
பொய்கரிபோ கன்மின், பொருண்மொழி நீங்கன்மின்
அறவோரவைக் களம் அகலாதணுகு மின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறன்மனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவைகடிமின்
கள்ளும், களவும், காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா,
உளநாள் வரையாது, ஒல்லுவதொழியாது
செல்லும்தே எத்துக் குறுதுணை தேடுமின்

மல்லல் மாஞாலத்து வாழ்விரு ஈங்கென

என்று கூறி சிலப்பதிகார பெருங்காப்பியம் நிறைவு பெறுகிறது. உலகில் பசியும் பிணியும் நீங்கி, நாடு நலம் பெற நாமும் கட்டுரை முடித்தோம்.