பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

5


இந்து சமயம் என்பது வேறு சில சமயங்களைப் போல ஒரு தனி நபரால், ஒரு ஞானியால், ஒரு தேவதூதரால், ஒரு தீர்க்க தரிசியால், ஒரு மகானால் உருவாக்கப்பட்ட கோட் பாடுகளை போதனைகளைக் கொண்டதல்ல என்பதை அறிவோம். காலத்தாலும் மக்களின் அனுபவ ஞானத்தாலும், அறிவாற்றல் திறனாலும், பல ஞானிகள், முனிவர்கள், அறிஞர்கள், சித்தர்கள், பலரும் வாழையடி வாழையாய்த் தோன்றி உருவாக்கி நிலை நிறுத்திய வாழ்க்கை நெறிமுறைகளும், வழிபாட்டு முறைகளுமே இந்து தர்மமாக பல்வேறு வடிவங்களில் மக்களிடையில் வேர் விட்டு நிலை பெற்றிருக்கின்றன. இந்து தர்மத்தின் கடவுள் கொள்கையும் பிரபஞ்சமயமானது எனப்பல சான்றோரும் குறிப்பிட்டுள்ளனர்.

"எல்லாம் கடவுள் மயம். எல்லா தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும் எல்லா செயல்களும் - எல்லாம் ஈசன் மயம்" என்று பாரதி இந்து தர்மத்தின் கடவுள் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறார். அதுவே கீதையின் காட்சியாகும்.

பிரபஞ்சத்திலுள்ள, அதாவது இந்தப் பேருலகத்தில் உள்ள சகல விதமான பொருள்களும் பரமாணு முதல் பேரண்டம் வரையிலான அனைத்தும், உயிர்ப் பொருள்களும் ஜடப் பொருள்களும் இடைவிடாத இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த இடைவிடாத இயக்கத்தினால் இடைவிடாத மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இந்தப் பிரபஞ்சத்தில் அதாவது இந்தப் பேருலகத்தின் தோற்றங்களில் ஒன்று மனிதனும் மனித சமுதாயமுமாகும். ஒவ்வொரு மனிதனும் தனி மனிதனாக எதிலும் தொடர்பில்லாமல் தன்னந்தனியே இருப்பதில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் கூட மனித சமுதாயத்தோடும் இயற்கையோடும் தொடர்பும் கொண்டே வாழ்கிறான். இந்தத் தொடர்பும் பரஸ்பரம் இணைந்து பிணைந்தும்