பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

6


பரஸ்பரம் ஒன்றையொன்று நிர்ணயித்தும் ஒரு உயிர்த் தொடர்புடன் கூடிய உறவாக அமைத்துக் கொண்டே வாழ்கிறான். இந்த உறவும் பரஸ்பரம் ஒன்றுபட்டும். முரண்பட்டும் உடன் பட்டும் முன் சென்று கொண்டேயிருக்கிறது. இதுவே இயற்கையின் மனிதனின், மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதியாக அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

உதாரணமாக சிவக்குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். சிவனும் பார்வதியும் நெருப்பும் நீருமாகும். சிவனுடைய வாகனம் காளை, பார்வதி சக்தியின் வாகனம் சிங்கம், சிவன் சக்தியின் பிள்ளைகள், விநாயகரும் முருகனும். விநாயகர் கருப்பு நிறம் பெருத்த வயிறு யானை முகம் பார்வைக்கு அசிங்கம் ஆனால் அறிவு கூர்மை பிரணவம், முருகன் பொன்னிறம், அழகன், ஆயினும் அவசரக்குடுக்கை. வினாயகரின் வாகனம் முஞ்சூறு, சிவன் கழுத்தில் பாம்பு. முருகனின் வாகனம் மயில் சிவனுடைய நிறம் சிவப்பு, பார்வதியின் நிறம் கருப்பு. இவையனைத்தும் ஒன்றுபட்டும் முரண்பட்டும் உடன்பட்டும் ஒரு மாபெரும் சக்தியாக ஒரு குடும்பத்தில் அடங்கி நிற்பதை அத்தத்துவத்தில் காண்கிறோம்.

மனிதன் ஒரு சமுதாயப் பிராணியாகவே இருக்கிறான். பிரபஞ்சத்தின் இதர பொருள்கள் எல்லாம் இடைவிடாத இயக்கத்தில் இருப்பதைப் போலவே மனிதனும் மனித சமுதாயமும் இடை விடாத இயக்கத்தில் இடைவிடாத செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. மனிதனின், மனித சமுதாயத்தின் இயக்கத்தில் அதன் செயல்பாட்டில் மய்யமாக இருப்பது அவன் செய்யும் தொழிலாகும். ஒவ்வொரு தனி மனிதனும் மனிதக்குழுவும் மற்றவர்கோளடு சேர்ந்தே அத் தொழில்களைச் செய்கிறார்கள். அவ்வாறு தொழில் செய்யும் போது ஒரு தனி மனிதனும் சரி, மனிதக்குழுக்களும் சரி, தனக்காவும், தங்களுக்காகவும் மட்டுமன்றி சமுதாயத்திற்காகவும், உலகிற்காகவும், உலகிலுள்ள இதர உயிர்ப்பொருள்களுக்காகவும் இயற்கையின் நலன்களுக்காகவும் சேர்ந்தே, இணைந்தே செய்கிறார்கள்.