பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

8


அவர்களுக்கும் சாகுபடியின் உற்பத்தி பயன்படுகிறது. இன்னும் அரசிற்கும் வரி, திரையாகச் செல்கிறது. மீதமுள்ளதை விவசாயிகள் தங்களுக்கும் எடுத்துக்கொண்டு, உபரியை சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக சந்தைக்கும் பண்டமாற்றத்திற்கும் பணமாற்றத்திற்கும் கொண்டு செல்கிறார்கள். இதே போல் சாகுபடி செய்யப்படும் காய்கள், கனிகள், பூக்கள் முதலியனவும் சமுதாயத்தின் பயன்பாட்டிற்காகக் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல் பருத்தி, வேர்கடலை, கரும்பு, தேங்காய் முதலிய விவசாய உற்பத்திப் பொருள்களும் தொழில்களுக்கும் மறு உற்பத்திக்கும் தேவையான, அவசியமான மூலப்பொருள்களாக சமுதாயத்திற்கும் பயன்படுகின்றன.

இதேபோல் உலகில் நடைபெறும் இதர தொழில்களும், மனிதத் தேவைகளுக்கான, உலகின் தேவைகளுக்கான உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு, போக்குவரத்து, கால்நடை பராமரிப்பு. இயற்கைச் சூழல் பாதுகாப்பு முதலிய அத்தியாவசியமான தேவைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்களும் சமுதாய நலன்களுக்கும் வளர்ச்சிக்குமாகவே செய்யப்படுகின்றன. லோக க்ஷேமத்திற்காகவே இவையனைத்தும் நடைபெறுகின்றன. நெசவுத் தொழில், மீன் பிடித்தல், கட்டிட வேலை செய்தல், வைத்தியம், சுகாதாரம் பேணுதல், கல்வி கற்பித்தல், சாலைகள், நீர் நிலைகள் நிர்மாணித்தல் பராமரித்தல், கோவில் கட்டுதல் பராமரித்தல், போக்குவரத்து சாதனங்கள் செயல்படுத்துதல் முதலிய தொழில்கள் பலவும் சமுதாய நலன்களுக்கும் உலக நலன்களுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உலக வளர்ச்சிக்குமாகவே செய்யப்படுகின்றன. நிர்வகிக்கப்படுகின்றன.

அறிவு உழைப்பும் இத்தகையதே! சிந்தித்தல், பேசுதல், எழுதுதல், பாடுதல், ஆடுதல், மற்றும் சட்டங்கள் செய்தல், சாத்திரங்கள், கவிதைகள், பாடல்கள், நாடகங்கள், கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சூத்திரங்கள், வேதங்கள், சாத்திரங்கள், படைத்தல் முதலிய அறிவு உழைப்பால் வெளிவரும், இனியும் வரும் அறிவுச் செல்வங்கள் அனைத்தும்