பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

10


பூர்வமாக அத்தொழிலைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் தனது தொழிலில் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்டு தனது உள்ளத்தையும் செயலையும் ஒரு முனைப்படுத்திக் கொண்டு இடைவிடாமல் தனது தொழிலைச் செய்து கொண்டே இருக்கும்போது அவன் கர்மயோகியாகி விடுகிறான். அத்தொழிலில் அவன் அறிவு சார்ந்த ஞானியாகி விடுகிறான். அதன்மூலம் அவன் இதர தயக்கங்கள் தடைகளிலிருந்து விடுதலை பெற்றவனாகிவிடுகிறான். அமரத்துவம், சாகா நிலை பெற்று விடுகிறான் என்பது கீதையின் சாரமாக அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

தனி மனிதனும் மனிதக்குழுக்களும் கூட்டங்களும் தங்களுடைய இயல்பான தொழில்களைச் செய்யும்போது இயற்கை நிலைகளுடனும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுடனும் இதர மனிதர்களுடனும் தொழில் வகையான சில வகை உறவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய உறவுகள் சமுதாய வளர்ச்சிக்கும் தனி மனித வளர்ச்சிக்கும் இசைவாக அமைய னேண்டியது அவசியமாகும். இவ்வாறான தொழில்களையும் செயல்பாடுகளையும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலும், மனிதர்களுக்குக்கிடையிலும், மனிதக்குழுக்கள் பிரிவுகளுக்கிடையிலும் உள்ள உறவுகளையும் நெறிப்படுத்துவதற்காகவே கருத்துக்களும் சாத்திரங்களும் சூத்திரங்களும் தத்துவங்களும் சட்ட திட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

பாரத நாட்டில் காலத்தாலும் மனிதனுடைய அனுபவத்தாலும் அறிவாலும் எண்ணற்ற ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், அறிஞர்களும், புலவர்களும், யோகிகளும் மனிதனையும் மனித வாழ்க்கையையும் சமுதாய வாழ்வையும் உலகையும், உலக வாழ்வையும் நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் உருவாக்கியதே படைத்ததே இந்து தர்ம சாத்திரங்களும் சூத்திரங்களும் வேதங்களும் உபநிடதங்களும், புராணங்களும் இதிகாசங்களும், இலக்கியங்களும் காவியங்-