பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

13


என பாரதத்தாயின் அரசியல் மரபையும் திறனையும் பாரதி எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.

இரண்டாவதாக உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் என்னும் உண்மையை சிலப்பதிகாரக் காப்பியம் எடுத்துக் கூறுகிறது.

ஆதி மனிதன் வரலாறு பூர்வமாக இனக்குழுக்களாகவும், இனக்கூட்டங்களாகவும் தாய் வழிச் சமுதாயங்களாகவும் தந்தை வழிச் சமுதாயங்களாகவும் கூட்டுக் கலப்பு வாழ்க்கை வாழ்ந்த நிலை மாறி உழவும் தொழிலும் பெருகி நாகரிகம் வளர்ந்து மனிதன் கிராமங்களையும் நகரங்களையும் அமைத்தபோது சமுதாயத்தின் முதல் நிலை அமைப்பாக குடும்பங்கள் உருவாயின. முதல் கூறான குடும்பம் முறையாக அமையும்போது சமுதாயமும் சிறப்படைகிறது. குடும்ப அமைப்பில் இல்லறத்தையும் இல்வாழ்க்கையையும் பற்றிய சீரிய நெறி முறைகளை நமது சாத்திரங்களும் சூத்திரங்களும் இலக்கியங்களும் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. குடும்பத்தில், குடும்பத்தலைவிக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இல்லத்தரசி எனப் பெயர் வழங்கப்படுகிறது. அக்குடும்பத்தலைவிக்கு அதிகமான பொருப்புகளும் கடமைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற

சொற்காத்து சோர்விலாள் பெண்

என்பது வள்ளுவர் வாக்கு.

இதில் பத்தினிப்பெண்டிர் முதலிடம் பெறுகின்றனர். தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர். கற்பு நிலை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பது இராமன் கதை கூறும் உண்மையாகும். கற்பு நிலைப் பெண் சக்தி வடிவம் பெறுவதை சிலப்பதிகாரக் காப்பியம் கூறும் உண்மையாகும்.

கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக உரைசால் பத்தினியாக மக்களும் மன்னர்களும் தேவர்களும் முனிவர்-