பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

16


இதில் ஊழ்வினை, விதியின் வலி என்று பூர்வ ஜன்மக்கர்மங்களுடன் இணைத்து அளவுக்கு மீறி அவை மூட நம்பிக்கையாக வளரும் அளவுக்குக் கொண்டு செல்வது நல்லதல்ல. அது தன்னம்பிக்கையை, செயலாக்கத்தை அழித்து விடும்.

இந்தப் பூர்வ ஜன்மசித்தாந்தத்தைச் சற்று அளவுக்கு மீறி அடுத்துவந்த புத்த சமணக் கருத்துக்கள் பிற்காலத்தில் அதிகமான கதைகளில் கொண்டு வந்து மனித வாழ்க்கையில் சில எதிர் விளைவுகளையும் உண்டாக்கிவிட்டது. எனவே விதியை மதியால் வெல்லலாம், விடாமுயற்சியால் இடையூறுகளைத் தாண்டலாம் என்றும் நம்பிக்கையூட்டும் நல்ல கருத்துக்களும் பின்னர் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு இளங்கோவடிகளாரின் இணையற்ற காப்பியத்தை நாம் ஆழ்ந்து கற்றுப் பலனடைய வேண்டும் பயனடைய வேண்டும்.