பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறங்கேற்று காதையில்

26


பறவைகளின் குரலோசைகளும் இதர இயற்கை சக்திகளின் அசைவுகளும் இசை வடிவத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை இந்து சமயம் காண்கிறது.

நுண்கலை, ஆற்றல் திறன் மிக்க ஆடலாசான்கள், இசையாசிரியர்கள், இயல் தமிழ்புலவர்கள், குழலாசிரியர்கள், யாழாசிரியர்கள், தண்ணுமை முதல்கள், ஒப்பனைக் கலைஞர்கள், அரங்க அமைப்பாளர்கள், ஓவிய ஆசான்கள், சிற்பத்திறன் வல்லுனர்கள், மற்றும் பலவகை கலைப் பணியாளர்கள், பலரும், அரசவைகளிலும், மக்களவைகளிலும், ஊரவைகளிலும், கோவில் மண்டபங்களிலும் இருந்து எண்ணற்ற அருங்கலைஞர்களை உருவாக்கி அழகிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விழாக்கள், கூத்துக்கள் மூலம் அரிய கருத்துக்களை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தப்பாடு பட்டிருக்கிறார்கள். கலைகளின் எல்லா வடிவங்களும் பயன்பாட்டில் நிலை பெற்றிருக்கின்றன.

நாரதரும், தும்புருவும், நந்தியும், கலை மகளும் இசை வடிவங்களாக நமது வாழ்க்கையின் முன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமுறைகளும் திவ்யப் பிரபந்தங்களும் இசை வடிவில், மக்கள் மனதில் பதிந்து மனிதனை உயர்த்தியிருக்கிறது. ஆண்டவனே நித்திரையில் இருப்பதாகக் கற்பித்து அந்த ஆண்டவனை எழுப்புவதற்காக பள்ளியெழுச்சிப் பாடல்களையும், பாவைப் பாடல்களையும், சுப்ரபாதங்களையும் பாடியுள்ளனர். அவையெல்லாம் நமது வாழ்க்கிைன் பகுதியாக அமைந்துள்ளன. இவற்றின் பல வடிவங்களையும் நாம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் அழகுறக் காணலாம்.

"எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்நான்கும் பண்ணின்ற கூத்து பதினொன்றும் - மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார் பொற்றொடி மாதவிதன்

வாக்கினால் ஆடலரங்கில் வந்து"