பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

31



கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்"

"குழலினும் யாழினும் குரன் முதலேழும்
வழுவின்றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும் பெறன் மரபின் பெரும்பாணர்"- என்றும்,
சிறு குறுங்கை வினைப்பிறர் வினையாளர்

மறுவின்றி விளங்கும் மருவூர்ப்பாக்கம்"

என்றும் மருவூர் பாக்கத்தில் வாழும் பலவகைத் தொழில் செய்வோரைப் பற்றி சிலப்பதிகாரக் காப்பியம் சிறப்பித்து கூறுகிறது.

இனிப் பட்டினப்பாக்கத்தில், அரசு குலத்தோரும், பெருங்குடி வணிகரும், மறையோரும் யாவரும் விரும்பும் குடியினரான உழவர்களும், மருத்துவ நூலோரும், காலக்கணிதரும், வேகடி வேலை செய்வோரும், நாழிகைக் கணக்கரும், சாந்திக் கூத்தரும், காவல் கணிகையரும், ஆடல் கூத்தியரும் பலவகை வாத்தியக்காரர்களும், நாற்படை வீரர்களும் மற்றும் பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோரும் நிறைந்து வாழ்ந்தனர் எனவும் காப்பிய வரிகள் விவரித்துக் கூறுகின்றன.

நகரின் இரு பகுதிகளிலும் சிறப்புமிக்க தொழில் புரிவோர் பல பிரிவினர்களும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நெருங்கிய மரங்கள் நிறைந்த சோலை. அச்சோலையில் சித்திரைப் பூரணையின்போது மக்கள் கூடுவர். அங்கு கடைகள் நிறைந்து கண் கொள்ளாக்கட்சியாக இருக்கிறது.. அங்குதான் காவல் பூதப்பீடிகை இருக்கிறது. நாளங்காடி என்று அங்குள்ள கடைகள் அழைக்கப்படுவதால் அந்தக் காவல் தெய்வத்திற்கு நாளங்காடி பூதம் என்று பெயராகும். அந்தக் காவல்