பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திர விழவூ ரெடுத்த காதையில்

32


தெய்வத்திற்கு இருபகுதி மக்களும் சேர்ந்து பொங்கல் இட்டு மன்னனை வாழ்த்தி, நாடு முழுவதிலும்,

"பெரு நில மன்னனிரு நில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க"

என்று வாழ்த்தி மக்களும் மாதரும் முழங்குவர் என்பது சிலப்பதிகாரக் காப்பிய வரிகள் கூறுகின்றன. இதுவே இப்பெருங் காப்பியத்தின் கொள்கை வெளியீடாகும்.

"நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற் குற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமான் ஏவலிற் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குடைமடையும்
"பூவும் கையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையரணங் கெழுந்தாடிப்
பெருநில மன்னன் இருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி

மாதர் கோலத்து வல வையினுரைக்கும்"

என்று சிலப்பதிகாரக் காப்பிய வரிகள் கூறுகின்றன.

"செரு வெங்காதலின் திருமாவளவன்
வாளும் குடையும் மயிர்க் கண்முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெருகவிம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்

புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்"

என இளங்கோவடிகள் கூறுகிறார்.

போரில் மிகவும் விருப்பம் கொண்ட திருமாவளவன், வாள் குடை முரசு முதலியவற்றை ஒரு நல்ல நாளிலே புறப்படச் செய்து, என் வலி பொருந்திய தோள்கள் எத்திசையிலாயினும் பகை வரைப்