பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

33


பெறவேண்டும் என்று தன் வழிபடு தெய்வத்தை அதாவது தனது இஷ் தெய்வத்தை, குல தெய்வத்தை வணங்குவது என்பதும் வ திசையைப் புண்ணிய திசை எனக் குறிப்பிடுவதும் இந்து சமய மரபாகும்.

காவல் தெய்வத்திற்கு சதுக்கம் இருப்பதைப் போலவே இதர தெய்வங்களுக்கும் சதுக்கங்களும் மன்றங்களும் பீடங்களும் இருப்பதும் இந்து சமய மரபாகும். அவை விரிந்து சிறிய பெரிய கோயில்களும் அவைகளையொட்டிய குளங்களும், மண்டபங்களும் பிரகாரங்களும் மாட வீதிகளும் ரத வீதிகளும் தோன்றி காலத்தால் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

மக்களுடைய நலன்களுக்காக பல வேண்டுதல்களும் தெய்வங்களின் பால் செய்யப்படுகின்றன. அவைகளில் பொது நலன்கள் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன.

நாளங்காடிச் சதுக்கத்தில் “இந்தப் பெரிய நிலம் முழுவதிலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளமும் சுரக்க” என வேண்டுதல் செய்யப்பட்டது போல மக்கள் நலனுக்காக, நாட்டு நலனுக்காக உலக நலனுக்காக தெய்வங்களை வேண்டுதல் நமது நாட்டின் சீரிய மரபாகும்.

“கூனும், குறளும், ஊமும், செவிடும்
அழகு மெய்யாளரும் முழுகினராடிப்
பழுதில் காட்சி நன்னிறம் பெற்று

வலஞ்சியாக் கழியும் இலஞ்சி மன்றமும்”

என்று கூறப்படும் சிலப்பதிகார வரிகள் மூலம், கூனர், குருடர், குறுகிய உடம்பினர், ஊமையர், செவிடர், தொழுநோய், தோல் நோய் போன்ற அழுகல் நோய்கள் கொண்ட உடம்பினர், தங்கள் நோயும் குறையும் தீர முழுகி, நீராடி, பழுதில்லாத தோற்றத்தைப் பெறுவதற்குரிய புண்ணிய தீர்த்தங்களும் வலம் செய்து நீராடி வழிபாடு செய்வதற்கான இலஞ்சி மன்றங்கள் இருந்தன என்பதையும் அறிகிறோம். இவ்வரிகள் மூலம் உடல் ஊன