பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திர விழவூ ரெடுத்த காதையில்

34


முற்றோர்பால் பரிவு கூறி அவர்களுடைய நலன்களைக் காப்பதற்கு சமுதாயம் ஆற்ற வேண்டிய கடமையை சுட்டிக் காட்டுவதாக இப்பாடல் வரிகள் அமைந்தள்ளன.

"வஞ்ச முண்டு மயற்பகையுற்றோர்
நஞ்ச முண்டு நடுங்கு துயருற்றோர்
அழல்வாய் நாகத்தா ரெயிறழுந்தினர்,
கழல் கண்கூளிக்கடு நவைப்பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்

நிழல்கால் நெடுங்க நின்ற மன்றமும்"

என்று கூறப்படும் வரிகள் மூலம்,

வஞ்சனையால் சிலர் மருந்தூட்டப்பட்டு பித்துப் பிடித்தவர்கள், தெரிந்தோ தெரியாமலோ நஞ்சுதனை உண்டு. அதனால் நடுங்கும்படியான துன்பம் அடைந்தவர்கள், விஷப் பாம்புகளினால் கடிக்கப்பட்டு, கலக்கமடைந்தோர், பேய்களினால் பாதிக்கப்பட்டு கொடுந்துன்பம் அடைந்தோர்கள் ஆகியோர்கள் தங்கள் துயர் நீங்குவதற்கு வலம் வந்து வழிபாடு நடத்துவதற்கான நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் இருந்ததை அறிகிறோம்.

"தவமறைந் தொழுகும் தன்மையிலாளர்
அவமறைந்தொழுதும் அலவற்பெண்டிர்
அறை போகமைச்சர், பிறர்மனை நயப்போர்,
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோரெனக்
காத நான்கும் கடுங்குரல் எழுப்பிப்

பூதம் புடைத்துணும் பூதச்சதுக்கமும்"

என்று கூறப்படும் வரிகள் மூலம்

தவ வேடத்தில் மறைந்து நின்று கூடா ஒழுக்கத்தில் ஒழுகும் தவத்தன்மையில்லாதவரும், மறைமுகமாக தீய நெறியில் ஓழுகும் அவலப் பெண்டிரும், கீழறுத்து துரோகம் செய்யும் அமைச்சரும், பிறர் மனைவியை விரும்புவோரும், பொய்சாட்சி கூறுவோரும், புறங்கூறுவோரும் ஆகியோர்கள் தனது கைகளில் உள்ள பாசக் கயிறுகளில் சிக்குவார்களாயின், நான்குகாத தூரம் கேட்கும் அளவில் கடுங்குரல் எழுப்பி அத்தீயோரைப் பாசத்தாற்