பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

35


கட்டி நிலத்தில் புடைத்து உண்ணும் பூதம் நிற்கும் பூதச் சதுக்கமும் இருந்ததாகக் காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த வரிகளில் குறிப்பிடப்படும் பாவச் செயல்களுக்கு தண்டனை உண்டு என்று அச்சம் காட்டி, மக்கள் அத்தகைய தீய நெறிகளில் போகாமல் நல்ல நெறிகளில் செல்லுமாறு தூண்டுவதற்காகக் கூறப்படும் கருத்துக்களேயாகும் இவையெல்லாம்.

இராமன் அரசுப் பட்டம் துறந்து காட்டிற்குச் செல்வதற்கு தனது தாய் காரணமானது கேட்டுத் துடித்துப்போன பரதன் பதபதைத்துக் கூறுவதைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் காட்டுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

"அறம் கெட முயன்றவன் அருளில் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன்
தாய்ப்பசி உழந்துயிர் தளரத் தான்தனிப்
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நயந்தவனும் நண்ணும்அத்

தீஎரி நரகத்துக் கடிது செல்க யான்"

என்றும்

"பொய்கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன்
கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்,
எய்த்திடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும்

மெய்கொடு நரகிடை விரைவின் வீழ்க யான்"

என்றும்,

"அந்தணன் உறையுளை அனலி ஊட்டினோன்
மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன்
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும்

வெம்துயர் நரகத்து வீழ்கயானுமே"

என்றும்,

"கன்றுயர் ஓய்ந்துகக்கறந்து பால் உண்டோன்,

மன்றிடைப் பிறர் பொருள் மறைந்து வவ்வினோன்