பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திர விழவூ ரெடுத்த காதையில்

36



நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன்

என்றிவர் உறும் நரகு என்னதாகவே"

என்றும்,

"ஆறு தன் உடன்வரும் அஞ்சொல் மாதரை
ஊறு கொண்டலைக்கத்தன் உயிர் கொண்டேகினோன்
சோறு தன் அயல் உளோர் பசிக்கத்துய்த்துள்ளோன்

ஏறும் அக்கதியிடையானும் ஏறவே",

என்றும்,

"அழிவரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டுதன்
வழிவரு தர்மத்தை மறந்து மற்றொரு

பழிவரு நெறிபடர் பாதகன் ஆகயான்"

என்றும்,

"கன்னியை அழிசெயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன்நறை
பொன் இதழ் கனவினில் பொருந்தினோன் எனும்"

இன்னவர் உறுகதி என்னதாகவே,

என்றும்,

"ஏற்றவர்க்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று,
மாற்றலன் உதவலன், வரம்பில் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்

கூற்றுறு நரகின் ஓர் கூறு கொள்கயான்"

என்றெல்லாம், பாவச் செயல்களையும் அதற்குரிய நரகத்தையும் அடுக்கடுக்காய் பரதன் கூறுவதைக் கம்பன் மிக அருமையாக எடுத்துக்காட்டுவதை இங்கு ஒப்பிடுவது பொருத்தமேயாகும். அடுத்தபடியாக,

"அரைசு கோல் கோடினும் அறங்கூறவையத்து
உரைநூல் கோடி ஒரு திறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவை நீருகுத்துப்

பாவை நின்றழு உம் பாவை மன்றமும்"

என்று கூறப்படும் காப்பிய வரிகள் மூலம்,