பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

37


அரசனது செங்கோல் சிறிது வளைந்தாலும் அறம் கூறப்பட வேண்டிய அவையத்தில் அவர் உரைக்கும் உரை ஒரு சிறிது நேர்மை திரிந்து ஒரு பக்கம் பற்றினும் நாவால் கூறாமல் துன்பக் fண்ணீர் சொரிந்து அழும் அறப்பாவை மன்றமும் இருந்ததை அறிகிறோம்.

இவ்வாறு மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தம் ஐவகை மன்றங்களிலும் மக்கள் கூடிக் கலந்து பொங்கலிட்டு வழிபாடுகள் பலவும் செய்தனர் என்றும் சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் விரித்துரைக்கிறது.

ஆறுகுளம் போன்றவைகளில் நீராடுதலைப் புனித நீராடுதலாக இந்து சமய நெறிகள் கூறுகின்றன. நீராடுதல் மூலம் உடல் சுத்தமாகிறது என்பது மட்டுமல்லாமல் உள்ளமும் அமைதி பெறுகிறது. எனவே பல துறைகளிலும் நீராடுதல் புண்ணியமானது என்னும் நம்பிக்கையும் பழக்கமும் நம் நாட்டு மக்களிடையில் நிலை பெற்றிருப்பதைக் காண்கிறோம். இவ்வாறு புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் தீர்த்த முடம் என்னும் சமணக்கருத்துக்களை அடிகளார் சில பாத்திரங்கள் மூலம் காப்பியத்தில் குறிப்பிட்ட போதிலும் மக்களிடமுள்ள இந்து சமயப்பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைக் கருத்துக்களையும் அடிகளார் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். அது போலவே, விழாக்கள், பொங்கல் இடுதல் போன்ற வழிபாட்டு முறைகளையும் அடிகளார் தமது காப்பியத்தில் பல இடங்களிலும் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இன்னும்

"தண்ணறுங்காவிரித்தாது மலிபெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத்தேந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழு நீராட்டிப்
பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடைய மன்னவன் கோயிலும்

மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ