பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

41


என்று முதலில் குறிப்படுகின்றன. இவை முதலில் தொடங்கும். அவை வாழ்த்துப் பாடல் போன்றதாகும். இவை தேவபாணி எனப்படுகிறது.

பாரதி யாடிய பாரதி அரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப உமையவாளன் ஒரு திறனாக வோங்கிய இமையவன் ஆடிய கொடு கொட்டி ஆடலும்

தேர் முன் நின்ற திறை முகன் காணப்
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

அல்லியத் தொகுதியும் அவுணற்கடந்த
மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்
சூர்த்திறங்கடந்தோன் ஆடிய துடியும்

படை வீழ்த்தவுணர்பையுள் எய்தக்
குடைவீழ்த்தவர் முன் ஆடிய குடையும்

வாணன் பேரூர் மருகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்
காய்கின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவன் ஆடிய மரக்கால் ஆடலும்

செருவேங்கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்
வயலுழை நின்று வடக்கு வாயிலுள்

அயிராணி டந்தை ஆடிய கடையமும்