பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காடுகாண் காதையில்

18


பொலம்பூ வாடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என் கண்காட் டென்று என்னுள்ளங்கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட்டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்

வாழ்த்தி வந்திருந்தேன்.”

என்ற வாறுள்ள காப்பிய வரிகளில் அரங்கனின் அழகையும் வேங்கடவனின் சிறப்பையும் விவரித்துக் கூறுவது தனி அழகாக அமைந்துள்ளது.

தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்டு வந்தேன் என்று அந்த மாங்காட்டு மறையோன் கூறியதால் அவனிடம் மதுரைக்குச் செல்லும் வழியைக் கோவலன் கேட்டான். அதற்கு அவ்வந்தணன் கூறிக் காட்டிய வழியைப் பற்றிக் குறிப்பிடுபோது:

“அறியும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறை நீரு வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும்போர் அத்தம் நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக்க கண்ணிப் பெரியோன் ஏந்திய

அறைவாய்ச் சூலத்தருதெறி கவர்க்கும்”

எனக் காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

கற்பாறை, சிறுமலை, ஏரிக்கரை கடந்து கொடும்பாளூர் அருகில் உள்ள நெடுங்குளத்தின் கரையைக் கடந்தால் பிறை சூடிய பெருமானாகிய இறைவன் ஏந்தியுள்ள திரிசூலத்தைப் போல மூன்று பிரிவாக வழி பரிந்து செல்கிறது என்று அந்தணன் வாயிலாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

வழி மூன்று பிரிவாகப்பிரிந்து செல்வதைச் சிவபெருமானின் திரிசூலத்திற்கு ஒப்பிடுவது இங்கு சிறப்பானதாகும்.