பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

47


“இந்த மூன்று பாதைப் பிரிவுகளில் வலப்பக்கம் உள்ள பாதையில் சென்றால் வயல்வெளிகளையும் திணைப் புலங்களையும் கடந்து பாண்டியன் சிறுமலையைத்தாண்டி இடப்பக்கத்தில் குளங்கள் தாழ்த்த வயல்கள், குளிர்ந்த பூஞ்சோலைகளையும் கடந்து சென்றால் திருமாலிருஞ்சோலை மலையாகிய அழகர் மலையை அடையலாம். அங்கு இடைவிடாத பல சிறப்புகளைக் கொண்ட மூன்று பொய்கைகள் புண்ணியத் தீர்த்தங்கள் உள்ளன. என்று மாங்காட்டு மறையோன் கோவலனிடம் விவரித்துக் கூறுகிறார்.

“அவைகளாவன, புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி ஆகியவைகளாகும். அவைகளில் நீராடினால் ஐந்திரம் அறிவிர், முற்பிறவியினை உணர்வீர், இட்ட சித்தி பெறுவீர்” என்றும்,

அங்குள்ள பிலத்தின் கண் போக விரும்பினால் அம்மலையில் எழுந்தருளியுள்ள மேலோனாகிய திருமாலை வணங்கி, அவனது திருவடிகளை உள்ளத்தின் கண் வைத்து அம்மலையை மூன்று முறைவலம் வந்து, புலத்தின் கண் புகுந்தால் ஒரு இயக்கமாது தோன்றி இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும். அவ்விரண்டுமின்றி எப்போதும் ஒரே தன்மையுள்ள துாயதாக உள்ள பொருளைக் கூறினால், தகுதியுள்ள உமக்கு பிலத்தின் கதவுகளைத் திறந்து விடுகிறேன் என்றும் கூறும்” என்றும்,

அவைகளுக்கு பதில் கூறி பிலத்திற்குள் புகுந்தால் அதனுள்ளே உள்ள பல கதவுகளையும் தாண்டிச் சென்று முடிவிலா இன்பம் யாது என்று உரைப்பிராயின் முப்பொருளினும் விரும்பிய பொருளினைப் பெறலாம்” எனவும்,

“அவ்வாறு அப்பிலம் புக விரும்பாவிடில் இயக்கமாது காட்டும் மூன்று புண்ணிய தீர்த்தங்களில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்களை மனதில் நினைத்தும் கூறியும் நீராடிப் பிறவிப் பயன் விரும்பாவிட்டால், அம்மலை மீது நிற்கும்