பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காடுகாண் காதையில்

18


திருமாலின் திருவடிகளை வணங்கிப் பிறவித்துன்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்களாக” என்றும்,

“அவ்வாறு அந்த வலப்பக்க வழியில் போக விரும்பாவிடில் மற்ற இரண்டு வழிகளில் இடைப்பட்ட வழியில் செல்லலாம் என்று மதுரை செல்லும் வழிகளைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கூறுகிறார் மாங்காட்டு மாமுது மறையோன்.

“வலம் படக்கிடந்து வழிநீர்த் துணியின்
அலறு தலை மராமும் உலறுதலை ஓமையும்
“பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்,
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர்கடமும் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கண் கரும்பும்
கொய்பூந்தினையும் கொழும்புனவரகும்,
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத்தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்,
அம்மலை வலங்கொண்டு அகன்பதிச் செல்லுமின்,

அவ்வழிப்பட ரீராயினிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண்டரற்றும்
தடந்தாழ்வயலொடு தண்பூங்காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து
திருமால் குன்றத்துச் செல்குவிராயின்
பொருமால் கெடுக்கும் பிலமுண்டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகாரணியோடு
இட்ட சித்தியெனும் பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை

முட்டாச் சிறப்பின் மூன்று ளவாங்குப்