பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. வேட்டுவரிக்காதையில்

இக்காதையில் அடிகளார் கொற்றவையின் அழகிய கோலத்தை மிகவும் நயம்பட எடுத்துக் கூறுகிறார்.

பிறையாகிய வெள்ளிய இதழைச் சுடும் சென்னியினையும், விழித்த இமையாத கண்ணினையும் பவளம் போன்ற வாயினையும், ஒளி வீசும் நகையினையும், நஞ்சினை உண்டதனால், கருத்த கண்டத்தினையும் உடையவள். கொடிய சினத்தையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாண்பூட்டி மேருவாகிய பெரிய மலையை வளைத்தவள், நஞ்சு பொருந்திய துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையவள். வளையல் அணிந்தகையில் குலத்தை ஏந்தினவள், யானையின் தோலைப் போர்த்து, சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள், இடப்பகத்து சிலம்பும், வலப்பக்கத்து விரக்கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும் மேலான வெற்றியையும் செயல் திறனையும் கொண்ட வாளினையும் உடைய கொற்றவை.

தலையும் உடலும் இரு வேறு வடிவினையுடைய திரண்ட தோள்களையுடைய அவுனனது தலையில் நின்றவள் யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள், இளமை பொருந்தியவள், கெளரநிறத்தைக் கொண்டவள், போரில் வல்லவள், சூலம் ஏந்தியவள். நீலநிற முடையவள், திருமாலுக்கு இளையவள், தலைவி, திருமகள், கொடிய வாளினைப் பெரிய கையில் தாங்கியதாகவும், கலையை ஊர்தியாகவும் கொண்ட பாவை, ஆராயும் கலைகளை உணர்ந்த வீரவளைகளையும் அரிய அணிகலன்களையும் அணிந்த பாவை போன்றவள் திருமாலும் நான்முகன் முதலியோரும் வணங்கத்தோன்றிய கன்னியின் கோலத்தைக் கொண்டவள் என்பதை,

“மதியின் வெண் தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையாநாட்டத்துப்
பவளவாய்ச்சி, தவள வாள் நகைச்சி,

நஞ்சுண்டு கருத்த கண்டி வெஞ்சினத்து