பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேட்டுவரிக்காதையில்

52


அரவு நாண்பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை யெயிற்று ரகக்கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலமேந்தி

கரியின் உரிவை போர்த்தணங்காகிய
அரியின் உரிவை மேகலையாட்டி
சிலம்பும் கழலும் புலம்புஞ்சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டு வேறுருவில் திரண்ட தோள் அவுணன்,
தலைமிசை நின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவர்க்கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப்பாவை
ஆய்கலைப்பாவை அருங்கலப்பாவை
தமர் தொழவந்த குமரிக்கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

என்று குறிப்பிடுகிறது காப்பியவரிகள்.

வேட்டுவர்கள் கொற்றவையைப் பலவாறு புகழ்ந்து பாடுவதை இளங்கோவடிகள் மிகவும் அழகாக சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். இந்த வேட்டுவ வரிப்பாடல்கள் சிலப்பதிகாரச் சிறப்புகளிலே ஒன்றாகும்.

“நாகம் நாறும் நரந்தம் நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின வெங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே”
“செம்பொன் வேங்கை சொரிந்தனசேயிதழ்
கொம்பர் நல்லிலவங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்இளந்

திங்கள்வாழ் சடையாள் திருமுன்றிலே”