பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

53


“மரவம் பாதிரி புன்னை மனங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ் செய்யும்,

திருவமாற்கிளையாள் திருமுன்றிலே”

நெற்றியில் கண்ணையுடைய சிவபெருமானது இடப்பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பீடத்தின் முன்பு, பிறை தாங்கிய சடையனது அழகிய பீடத்தின் முன்பு, திருமாலுக்கு இளையவளது பீடத்தின் முன்பு, புன்னையும் நார்த்த மரங்களும், ஆச்சாவும் சந்தன மரங்களும், சேமரங்களும் மாமரங்களும் நெருங்கி வளர்ந்து நின்றன. வேங்கை மரங்களும், இலவமரங்களும் தமது சிவந்த மலர்களையும் புங்கை மரங்கள் தமது வெண்மையான மலர்களையும் கொட்டிக்குவித்தன. கடம்பு பாதிரி, புன்னை, குரா, கோங்கு முதலிய மரங்கள் பூத்துக்-குலுங்கின. அவற்றின் மீது வண்டுகள் ரீங்காரம் செய்து யாழ் போல இசைத்தன, என்று மிகவும் அழகாக வர்ணனை வரிகள் ஒலிக்கின்றன.

அடுத்து கொற்றவை எவ்வாறு கம்பீரமாய் நிற்கிறாள் என்பதைக் காப்பிய வரிகள் சிறப்பித்துக் கூறுகின்றன.

“ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக்கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்”

“வரிவளைக் கை வாளேந்தி மாமயி டற் செற்றுக்
கரியதிரி கோட்டுக்கலை மிசை மேல் நின்றாயால்
அரியரன் பூமேலோனன் அகமலர் மேல் மன்னும்,
விரிகதிரஞ் சோதி விளக்காகியே நிற்பாய்”
“சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுத லோன் பாகத்து

மங்கை உருவாய் மறையேத்தவே நிற்பாய்”