பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. புறஞ்சேரியிருந்த காதையில்

கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் இரவெல்லாம் நடந்து ஒருநாள் அதிகாலையில்,

“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்

புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து”

என, வேதநூல்களைப் பய பின்று அதன் படியான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் அந்தணர்கள் குடியிருக்கும் ஊர் ஒன்றை அடைந்தனர் என்று அடிகளார் குறிப்பிடுகிறார். இங்கு மறை நூல்கள் படிப்பதும் அதன் நெறிமுறைகளின்படி நடப்பதும், அன்றைய நடப்பில் இருந்த இந்து சமய நெறி முறைப் பழக்கங்களை அடிகளார் மிகவும் சிறப்பாகவே குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

கோவலனைப் பிரிந்த காவிரிப் பூம்பட்டினம், இராமனைப் பிரிந்த அயோத்தியைப் போல மக்கள் அறிவு மயங்கி நின்றதாக உதாரணம் காட்டி அடிகளார் குறிப்பிடுகிறார்.

“பெருமகன் ஏவலல்லதி யாங்கணும்
அரசேதஞ்சமென்ற ருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

பெரும்பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்”

என்று சிலப்பதிகாரச் செய்யுள் குறிப்பிடுகிறது.

கோவலனை இழந்த பூம்புகார் நகரம் இராமனை இழந்த அயோத்தி நகரம் போல் இருந்தது என்பது அடிகளார் வரிகள். இராமனை இழந்த அயோத்தி பற்றி,

“ஏர்துறந்தவயல், இளமைந்தர் தோள்
தார்துறந்தன, தண்தலை நெல்லினும்
நீர்துறந்தன, தாமரை நீத்தெனப்

பார்துறந்தனள் பங்கயச் செவ்வியே”

என்றும்,