பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

57


“நகையிழந்தனவாள்முகம் நாறு அகில்
புகையிழந்தன மாளிகை, பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை, தேமலர்த்

தொகையிழந்தன தோகையர் ஓதியே”

எனவும்,

“தேரும், மாவும்,களிறும் சிவிகையும்,
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்
யாரும் இன்றி எழீல் இல வீதுகள்

வாரி இன்றிய வாலுக ஆற்றினே”

என்றும் கம்பன் கவிதைகள் மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறுகின்றன.

இளங்கோவடிகள் இராமன் இல்லாத அயோத்தியை ஒப்பிட்டது தனிச்சிறப்பு மிக்கதாகும். இராம காதையின் இதிகாசச் சான்று குறிப்பிடத்தக்கதாகும்.

மதுரை மாநகரைக் குறிப்பிடும்போது

“அருந்தெறற் கடவுள் அகன் பெருங்கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால் கெழு சிறப்பிற் பல்லியஞ்சிறந்த
காலை முரசக்கனை குரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்

மாதவர் ஓதி மலிந்த ஓதையும்”

என்று நகரின் சிறப்பையும்,

“உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி”

என்று வையை ஆற்றின் சிறப்பையும்,

“அறம்புரிமாந்தர் அன்றிச் சேரா புறஞ்சிறை மூதூர்” என்றும் அடிகளார் குறிப்பிட்டிருப்பது கவனத்திற்

கொள்ளத்தக்கதாகும்.