பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

59


எனது நிலையை உணர்த்தி நான் திரும்பும் வரை இவள் உங்களிடம் இருக்கட்டும் என்று மனவருத்த முற்று விடை கேட்டான். இங்கு கோவலன் தான் செய்த தவறுகளை நினைந்து வருந்தி நல்வழி காணவும் மீண்டும் நல்ல நிலைக்கு வருவதற்கு விரும்பியும் மனம் விட்டுப் பேசுவதை அடிகளார் மிகவும் நயமாக எடுத்துக் கூறுகிறார்.

“நெறியின் நீங்கியோர் நீர்மையேனாகி
நறுமலர் மேனி நடுங்கு துயரெய்த
அறியாத் தேயத் தாரிடையுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான்
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை யுணர்த்தி யான் வரும் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடியாகலின்

ஏத முண்டோ அடிகளிங்கென்றலும்”

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன

அதற்குக் கவுந்தியடிகள், கோவலனைத் தேற்றுகிறார். பல அறிவுரைகளையும், அறவுரைகளையும் எடுத்துக் கூறுகிறார். சென்றதை எண்ணிப் பலன் இல்லை. பாவ நெறியினின்றும் நீங்க வேண்டும். அப்படி நீங்காவிட்டால் அப்பாவச் செயல்கள் பல துன்பங்களை விளைவிக்கும். அவ்வாறு நிகழும் துன்பங்களைக் கண்டு அற நூல்களைக் கற்றறிந்த அறிஞர்கள் துவள மாட்டார்கள்.

கொண்ட மகளிரைப் பிரிவதும் அதனால் விளையும் துன்பங்களும் தனித்த வாழ்க்கை நடத்துவோர்க்கு இல்லையே தவிர, பெண்டிரும் உண்டியும் தான் இன்பம் தரத்தக்க பொருளாம் என்று கருதியவர், அடைந்த பிரிவுத் துன்பங்கள் இன்று மட்டுமல்ல முற்காலத்திலும் நடந்திருக்கின்றன என்று கூறி, இராமன் சீதையைப் பிரிந்து வருந்தியதையும், நளன் தமயந்தியைப் பிரிந்து வாழ்ந்த கதையையும் எடுத்துக்கூறி அவையெல்லாமல் வினைப் பயனேயாகும், ஆயினும் அவர்களைப்