பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்காண் காதையில்

18


போல் நீ உன் மனைவியைப் பிரியவில்லை. பிரியா வாழ்க்கை பெற்றிருக்கிறாய். எனவே கவலையின்றி நகருக்குச் சென்று உனது வேலைகளைக் கவனித்து முடித்துக்கொண்டு திரும்புவாயாக என்று அறிவுரை கூறி அனுப்புகிறார்.

இங்கு கவுந்தியடிகள் வெறும் பெண்டிரும் உண்டியும் மட்டுமே இன்பமெனக் கருதிக் துன்பமடைந்தோர் பலருண்டு என்று அறிவுரை கூறுவதும், இராமன் சீதை கதையையும், நளன் தமயந்தி கதையையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதும் இளங்கோவடிகளின் காப்பியச் சிறப்பாகும். இதில் அமைந்துள்ள பொதுக்கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

“பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
உருவிலாளன் ஒறுக்குந்துன்பமும்
புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கல்லது
ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்பமென்றுலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத்துன்பம்
கண்டனராகிக் கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்தாங்கு
ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்
இன்றேயல்லால் இறந்தோர் பலரால்
தொன்றுபட வரூஉம் தொண்மைத்தாதலின்
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலிநீங்கக் கடுந்துயருழந்தோன்
வேத முதல் வன்பயந் தோனென்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ”

“வல்லாடாயத்து மண்ணரசிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்
காதலிற்பிரிந்தோனல்லன் காதலி
தீ தொடு படுஉம் சிறுமையள் அல்லள்
அடவிக் கானகத்தாயிழை தன்னை

இடையிருள் யாமத்திட்டு நிக்கியது