பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. அடைக்கலக்காதையில்

மதுரையின் ஆட்சியின் அரசியல் கொள்கை நிலை பற்றிய குறிப்புடன் தொடங்குகிறது இக்காதை, இளங்கோவடிகளார் இப்பெருங்காப்பியத்தில் கூறும் அரசியல் பொதுக்கருத்துக்கள் பலவும் இன்றும் கூட மக்களுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளாக உள்ளன.

மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் ஆட்சி முறைக்குப் பொதுவான பல கொள்ளைகளும் நெறிமுறைகளும் அமைந்துள்ளன. நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் மற்றும் இதர உயிர்கள் அனைத்திற்கும் வேண்டிய உணவையும் வாழ்க்கைக்கு அவசியமான இதர பொருள்களும் கிடைக்குமாறு ஆட்சிச்சக்கரம் அமைய வேண்டும். ஆட்சியின் செம்மை, தண்மை, கொற்றம் ஆகியவை சீராக அமையும் கொள்கை நிலை பெற்றிருக்க வேண்டும். நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்து , பிழைப்பிற்கு வேற்றிடம் போகாத நிலை இருக்க வேண்டும் என்பதைப் பாண்டியராட்சியின் மதுரையைப் பற்றி சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்படுகிறது.

"நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம் பூண்டு ருட்டுங் கௌரியர் பெருஞ்சீர்க்

கோலின் செம்மையும் குடையின் தண்மையும்

வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்

பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட

மதுரை மூதூர் .........."

என்று இளங்கோவடிகளின் காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

மதுரையின் புறநகர்ப் பகுதி பற்றி