பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைக்கலக்காதையில்

64


வந்தது பற்றி மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

கோவலனைப் பற்றி நன்று அறிந்திருந்த மாடல மறையோன், அவனுடைய பெருமைகளைப் பற்றியும் அவன் செய்துள்ள நல்லகாரியங்களைப் பற்றியும் சிறப்பித்தும் கூறுகிறான். அவையனைத்தும் மக்களை நல்வழிப் படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த நல்வினைகளாகும்.

தனவணிகர்களின் முக்கிய பண்புகளில் ஒன்று புண்ணிய தானங்கள் செய்வதாகும். பொருள் உள்ளோர் அனைவருக்கும் இந்த உரைபொருந்தும். அவ்வாறு தானம் செய்தோருக்கு துன்பம் நீங்கி துயர்க்கட லொழியும் என்னும் கருத்துப்பட

"உன்பெரும் தானத்து உறுதி யொழியாது

துன்பம் நீங்கி துயர்க் கட லொழிகென"

கோவலனுடைய முன்னோர் ஒருவருக்கு அவர்களுடைய வழிபடு, தெய்வம் உதவியதாகக் காப்பியக்கதை கூறுகிறது.

மக்களுக்கு ஆபத்து எற்படும்போது அவற்றைத் தடுத்து அம்மக்களைப் பாதுகாப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும் வறுமைப்பட்டவர்களுடைய பசிப்பிணியைப் போக்குவதும் இல்லாதோருக்கு உதவுவதும் மனிதனுடைய நற்பண்புகளாகும். இவைகளுக்குக் கோவலன் முன்னுதாரணமாக இருந்தான் என்பதைக் காட்டும் வகையில் அவனுடைய சீரிய பண்புகளைக் குறிக்கும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளை மாமறை முதல்வன் மாடலன் கூறுவதைச் சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் குறிப்பிடுகிறது.

கோவலனிடம், ஞான நன்னெறி மிக்க ஒருமாமுது மறையோன் தானம் பெறுவதற்கு வந்தபோது, ஒரு மதம் பிடித்த யானை அந்த மறையோனைத் துன்புறுத்த வந்தபோது கோவலன் அந்த யானையைத் தடுத்து அதன் மதத்தை அடக்கி, அந்த