பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தடித்த எழுத்துக்கள்13. கொலைக்களக்காதையில்

கவுந்தியடிகளின் அறிவுரைப்படி இடைக்குல மடந்தையான மாதரி, கோவலனையும் கண்ணகியையும் தனது மனைக்கு அழைத்துச் சென்று தனி வீடு கொடுத்து இருக்கச் செய்தாள். பாத்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள் கொடுத்து உதவினாள். தனது மகளான ஐயையை கண்ணகிக்குத் துணையாக இருக்கச் செய்தாள். கண்ணகியும் நன்கு சமையல் செய்து தனது கணவனுக்கு உணவளித்தாள். கண்ணகி உணவு பரிமாற, கோவலன் தடுக்கில் அமர்ந்து உண்னும் காட்சியை ஆயர்பாடியில் கண்ணனும் நப்பின்னையும் சேர்ந்து வாழ்ந்த காட்சியைப் போல இருந்ததாக மாதரியும் ஐயையும் கருதி பெருமகிழ்ச்சி பெற்று பூரிப்பு அடைந்ததாக இளங்கோவடிகள் ஒப்பிட்டு எடுத்துக் கூறுகிறார். "தண்ணிர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிகளிங்கென அரசர் பின்னோர்க்கருமறை மருங்கின் உரியவெல்லாம் ஒரு முறை கழித்தாங்கு ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமுதுண்ணும் நம்பியீங்குப் பல்வளைத் தோழியும் பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள்தூமணி வண்ணனை விழுமந்தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந்தவ்வையும் விம் மிதமெய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சியிங்கென"

என்று கண்ணன் காட்சியாகக்காப்பிய வரிகளில் ஒப்பிட்டுக் கூறியிருப்பது சிறப்பாகும்.