பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

75



வஞ்சத்தால் வந்து நின்ற ஆவின் கன்றினைக் குணிலாகக் கொண்டு அங்ஙனமே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன் மேருமலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் சுற்றியும் பாற்கடலைக் கடந்த மாதவன், நமது கொல்லையில் வஞ்சத்தால் வந்து நின்ற குருந்த மரத்தினை முறித்துச் சாய்த்த மாயக்கண்ணன், நமது வழிபாட்டால், நமது ஆவின் கூட்டத்தில் வருவானாகில் அவனுடைய தீங்குழல் இசையைக் கேட்போம் தோழி எனப்பாடி ஆடுகின்றனர்.

அந்த யமுனைத் துறைவனின் அழகையும் அவனோடு சேர்ந்து ஆடும் நப்பின்னையின் அழகையும் நாம் சேர்ந்து கூடி புகழ்ந்து பாடுவோம் என்றும் பாடி ஆடுகின்றனர்.

மிகவும் அழகான இனிமையான பாட்டுகளில் இளங் (கோவடிகள் இவ்வடிகளைக் கூறுகிறார். இப்பாடல்களில் சாதாரண மக்களின் எளிய வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து அவர்களுடைய உள்ளத்தின் உண்மை உணர்வால் எழுகின்ற வார்த்தைகளின் நாட்டுப்பாடல் இனிமையை நாம் காண்கிறோம். வாழ்க்கையோடு கூடி இணைந்த இந்து சமய வழிபாட்டு இசையின் இனிமையை இப்பாடல்களில் நாம் காண்கிறோம்.

1.

"கன்று குணிலாக்கனி யுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்

கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழீ

2. 

பாம்பு கயிறாக்கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள்வருமேல் அவன் வாயில்

ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழீ"

3. 

"கொல்லை யஞ்சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ"
தொழுனைத் துறைவனோடாடிய பின்னை

அணிநிறம் பாடுகேம் யாம்"

என்பது காப்பியத்தில் காணப்படும் பாடல்களாகும்.