பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

76



அன்றிவ்வுலக மளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் வேகமே யேத்திப்பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோ மிரங்கே லோ ரெம் பாவாய்

என்று ஆண்டாள் பாவைப்பாட்டில் குறிப்பிடுகிறார்.

"இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என் கோயாம்
அறுவை ஒளித்தான் அயர அயரும்

நறுமென் சாயல் முகம் என் கோயாம்"

ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்த கண்ணனின் வடிவழகைப் பாடுவோமோ அல்லது ஆடையின்மை கண்டு தளர்வுற்ற அந்த ஆயர் குலப் பெண்களின் அழகைப் பாடுவோமா என்றும்,

2.

"வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்

வஞ்சம் செய்தான் வடிவு என் கோயாம்"

யமுனை யாற்றில் தன்னை வஞ்சித்தவனுடைய உள்ளம் கவர்ந்தவளைப் பாடுவோமோ அல்லது அந்த உள்ளம் கவர்ந்தாளின் அழகையும் வளையலையும் கவர்ந்தானது வடிவழகைப் புகழ்ந்து நாம் பாடுவோமா என்றும்,

3.

"தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என் கோயாம்
கையில் ஒளித்தாள் முகம் கண்டழுங்கி

மையல் உழந்தான் வடிவென் கோயாம்"