பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

78



இப்போது அழகிய ஆண்மயிலின் கழுத்தின் நீல நிறத்தைப் போன்ற வண்ணமுடைய கண்ணனுடைய வலப் புறத்தும் அழகிய மலர் போன்ற வெண்மை நிறம் கொண்ட பல தேவனுடைய இடப்புறத்திலும் நப்பின்னைப் பிராட்டி இருக்கிறாள். அதற்கேற்பத் தாளம் தவறாது நாரதனார் வகுத்த முறைப்படி இசை எழுப்பிப் பாடினர் என்றும் ஆய்ச்சியர் குரவைப் பாடல் பாடியதை இளங்கோவடிகளார் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்.

இவ்வாறு நாரதன் தனது தாளச் சீருடன் கூடிய யாழிசையால் கண்ணனும், பலராமனும், நப்பின்னைப் பிராட்டியும் சேர்ந்து ஆடுவதற்கேற்ப தனது யாழ் நரம்புகளை மீட்டி இசைப்பதாக ஆயர்பாடிப் பெண்கள் அழகாகப் பாடுவதை இளங்கோவடிகள் தனது பாடல் வரிகளால் குறிப்பிடுகிறார்.

நாரதன் நாரணன் புகழ் பாடுவதை ஆழ்வார்கள் பல இடங்களிலும் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகிறார்கள்.

ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய்
அவனியாய் அருவரைகளாய்
நான்முகனாய் நான் மறையாய் வேள்வி
தக்கணையாய்த் தானுமானான்
சேமமுடைநாரதனார் சென்று சென்று

துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்

என்று பெரியாழ்வார் குறிப்பிட்டுப்பாடுகிறார். மற்ற ஆழ்வார்களும் நாரதன் திருமால் புகழ்பாடுவதைக் குறிக்கும் பாடல்களை திவ்யப்பிரபந்தத்தில் காணலாம்.

மாயவன் தன் முன்னினொடும்
வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தம் சிறுமியர்கள்
குழற்கோதை புறஞ்சோர

ஆய்வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு