பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

79



அசோதையார் தொழுதேத்தத்
தாதெரு மன்றத்து ஆடும் குறவையோ
தகவுடைத்தே,
எல்லாம் நாம்

புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்

உள்வரிப் பாணி யொன்று உற்று.

கண்ணன் தனது முன்னவனான பலதேவனுடனும், அழகிய வளையல்களை அணிந்த நப்பின்னைப் பிராட்டியோடும் ஆயர் குலச் சிறுமியர் தங்கள் அழகிய கூந்தலிலே சூடியுள்ள மலர் மாலைகள் கழுத்துப்புரத்திலே வீழ்ந்து அசைந்தாட, கைகளில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் அசைந்து ஒலிக்கின்ற தாளத்திற்கேற்ற அடி எடுத்து வைத்து அசோதைப்பிராட்டி, மகிழ்ந்து வணங்கிப் புகழ கோகுலத்தின் எருமன்றத்தில் ஆடிய குரவைக் கூத்து மிகவும் சிறப்புடையதாக அமைந்திருந்தது.

இனி கருடப்பறவையை ஊர்தியாகக் கொண்டுள்ள கடவுளான திருமாலை நாம் அனைவரும் சேர்ந்துப் போற்றிப் பாடுவோம் என்று மாதரி கூற அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள்.

அவ்வாறு கண்ணனைப் புகழ்ந்து பாடி ஆடிடும் குரவைக் கூத்து மிகவும் பொருத்தமானதாகவும் சிறப்பு மிக்கதாகவும் போற்றத்தக்க வகையிலும் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

மேலும் ஆய்ச்சியர் குறவைக் கூத்து ஆடுகையில் பாண்டியனையும், சோழனையும், சேரனையும் திருமாலுக்கு ஒப்பிட்டுப் பாடுகிறார்கள். மன்னனைத் திருமாலுக்கு ஒப்பிட்டுப் பாடுவது அக்கால வழக்கமாக இருந்திருக்கிறது.

"திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்

உலகளந்தான் என்று துள்ளும்