பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

80



கருவுடைத் தேவில்களெல்லாம்
கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்

கண்ணன் கழல்கள் விரும்புமே.

என்று நம்மாழ்வார், திருவாய்மொழியில் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

அவ்வழியில் இளங்கோவடிகளாரும் தனது பெருங்காப்பியத்தில்

"கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர் கோன் மார்பினவே,
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்

கோகுலமேய்த்துக்குருந் தொசித்தான் என்பரால்"

என்று பாண்டிய மன்னனையும்,

"பொன்னிமயக் கோட்டுப் புலிபொரித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் பதிற் புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்

பொன்னந்திகிரிப் பொரு படையான் என்பரால்"

என்று சோழ மன்னனையும்,

"முந்நீரினுள் புக்கு மூவாக்கடம் பெறிந்தான்
மன்னர் கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னன் கோச்சேன் வளவஞ்சி வாழ்வேந்தன்

கன்னவில் தோளோச்சிக் கடல் கடந்தான் என்பரால்,"

என்று சேர மன்னனையும் ஆயார்பாடிக் பெண்டிர் ஆய்ச்சியர் குரவையில் பாடுகிறார்கள்.