பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

84


என்று திருமாலின் திருவடிகளைப் பற்றியும் திருமங்கை யாழ்வார் மிக அழகாகப் பாடியிருப்பதைப் காணலாம். ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் இங்குதிருமங்கையாழ்வாரின் பாடல்களுடன் ஒப்பிடத்தக்க கவைகளாக அமைந்துள்ளன.

படர்க்கைப் பரவலாக

1.
மூவலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை
தாவிய சேவடி சேப்பத்தம்பி யொடும்கான் போந்து
சோவரணும் போர்முடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே.

2.
பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்,
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே”

3.
மடந்தாழ நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத்தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணாவென்னா நாவென்ன நாவே

என்று திருமால் பெருமையைக் கேளாத செவிகள், காணாத கண்கள், பேசாத நாவு, செவியுமல்ல, கண்ணுமல்ல, நாவுமல்ல என்று ஆய்ச்சியர் குரவையில் பாடும் இந்தப் பாடல்கள் செவிக்கும் கண்ணுக்கும் வாய்க்கும் இனியவை. இப்பாடல்கள் ஆழ்வார்களின் சிறந்த பக்திப் பாடல்களுக்கு இணையாக அவைகளுக்கு மிக நெருக்கமான வந்துள்ளன.

“நீணாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்கடலைப்
பேணான் கடைந்த முதம் கொண்டுகந்த பெம்மானை
பூணாரமார் வனைப் புள்ளும் பொன் மலையை

காணாதார் கண்ணென்றும் கண் அல்ல கண்டாமே!