பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 103

பொப்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின் மனனுாண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஒம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின் மல்லல்மா ஞாலத்து வாழ்விர் ஈங்கென்.” என்று தமது காப்பியத்தில் இளங்கோவடிகளார் சிறப்புறக் 1. லுகிறார்.

பொருள் முதலிய செல்வங்களை இழக்க நேரிடும் 't նյ வருந்த வேண்டா. துன்பங்களைக் கண்டு கலங்க வேண்டா. உண்மையான தெய்வத்தைத் தெளிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிந்தோரின் உறவுகளைப் பேணுங்கள். பொய் சொல்லாதீர்கள். புறம் கூறாதீர்கள். ஊன் ன வை விலக்குங்கள். உயிர்க்கொலை செய்யாதீர்கள். தானம் செய்யுங்கள். தவங்கள் பல செய்யுங்கள். பிறர் செய்த ம தவியை நன்றி மறக்காதீர்கள். தியோர் நட்பை விலக்குங்கள். பொய்ச்சாட்சி சொல்லாதீர்கள். உண்மை நிலையிலிருந்து நீங்காதீர்கள். அறவோர் அவையிலிருந்து அகலாதீர்கள். விேனையாளர் அவையிலிருந்து நீங்குங்கள். பிறர்மனையை விரும்பாதீர்கள். துன்புற்ற உயிர்களுக்கு உதவி செய்யுங்கள். இல்லறத்தைப் போற்றுங்கள். பாவச் செயல்களை நீக்குங்கள். கள்ளையும் களவையும் காமத்தையும் பொய்யையும் வெட்டிப் பேச்சுகளையும் ஒழியுங்கள். இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையற்றவை. நமது வாழ்நாள் வரையறுக்கப்பட்டது. மரணத்திலிருந்து நாம் தப்பமுடியாது. அதனால், வாழும் நாள்களை வீணாக்காமல் நல்லறங்களைத்