பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தேடி அவைகளை நிறைவேற்றுங்கள். செல்வ வளம் மிக்க இந்த உலகில் வாழும் மக்களே, நல்வாழ்வுடன் வாழ்வீர்களாக என்னும் கருத்துகளை இளங்கோவடிகளார் சிறப்பாக எடுத்துக் கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கிறார். இந்தச் சிறப்பான நூலின் நோக்கமாக, “அரைசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினிக்குயர்ந் தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும்" எடுத்துக்கா ட்டப்பட்டுள்ளஆl.

அரசியல் பிழையைப் பாரத சமுதாயம் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை; அதற்கு அடிபணிந்தும் போன தில்லை. உரிய காலத்தை நோக்கியே காத்திருக்கிறது. இந்த வழியில் பாரதி :

"நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாள்.எங்கள்தாய் - அவர் அல்லவ ராயின் அவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடுவாள்." என்று பாடுகிறார். ஆழ்வார்களின் அறிவுரைகள்

ஆழ்வார்களின் பாசுரங்கள் இனியவை, பக்தி தத்துவமும் பிரபத்தி தத்துவமும் கொண்டவை ; வேதாந்த தத்துவ ஞானம் நிறைந்தவை. அவை கதையோ காப்பியமோ அல்ல; திருமாலின் திருவவதாரச் சிறப்புகளை, அபாரமான பக்தியோடும் தாங்கள் அனுபவித்தும் தங்களை அர்ப்பணித்தும் மெய்மறந்தும் பாடும் பாசுரங்களாகும். அத்துடன் அப்பாசுரங்கள் மிகுந்த மனிதாபிமானமும் லோகாபிமானமும் சமுதாய உணர்வும் கொண்டவைகளாகும் அதே சமயத்தில், திருமாலின் அவதாரச் சிறப்பு என்பது சிறந்த அரசியல் சமுதாய, தத்துவக் கருத்து நிறைந்ததாகும். திருமாலின் அவதார நோக்கம் தியோரை நீக்கி, நல்லோரைக் காப்பதாகும் பாவத்தை முரியடித்து அறத்தைக் காப்பதாகும்: அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் சிறந்த தத்துவத்தை உலகில் நிலை நிறுத்துவதாகும். கம்ப நாடர் இராமபிரானின் அவதாரச் சிறப்புபற்றி மிகவும் அற்புதமாக