பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 105

பெ கவிதையில் குறிப்பிடுகிறார். அனுமனை வெlததன் பிரம்மாத்திரத்தால் கட்டி, இராவணனுடைய _ .க, இழுத்துக்கொண்டு போய் நிறுத்துகிறான். பெவனன் அனுமனிடம், "யார் நீ இலங்கைக்கு நீ வந்த வம் என்ன, உன்னை யார் இங்கு அனுப்பியது, பlaiலாமல் சொல்” என்று கேட்கிறான். அப்போது அவறுமன், தான் வில்லியின் துரதன் என்று குறிப்பிட்டு (1)ப பியனுடைய அவதாரச் சிறப்பைக் குறிப்பிடுகிறான் :

"மூலமும் நடுவும் ஈறும் இல்லதுஓர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த காரணன், கைவில் ஏந்திச் சூலமும் திகிரிச் சங்கும் கரகமும் துறந்து தொல்லை . ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு அயோத்தி H வந்தான்." மூலத்தோற்றமும் நடுவும் முடிவும் இல்லாத (I/ன்றாகியவன்; காலத்தையும் எல்லையையும் கடந்தவன்; உலகில் அனைத்திற்கும் காரணமானவன்; சங்கு க்கராயுதங்களையும் கமண்டலத்தையும் துறந்து, ஆலிலையும் தாமரை மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டுக் கையில் வில் ஏந்திக்கொண்டு, அயோத்தி வந்து சேர்ந்துள்ளான் என்று அனுமன் கூறுகிறான்.

அயோத்தியில் இராமனாக அவதரித்த திருமாலின் அவதாரப் பெருமையைப்பற்றி மேலும் அனுமன்,

"அறம்தலை நிறுத்தி, வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித் திறம்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தியோர் இறந்துஉக நூறித் தக்கோர் இடர்துடைத்து ஏக, ஈண்டுப்

பிறந்தனன்" என்றான்.

கண்ணபிரான் தனது கீதையில், 'பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.