பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இந்த வாசகங்களில் தெய்வநிலையுடன் மனித சமுதாயத்தையும் இவ்வுலகையும் காத்தல் கடமையும் சேர்ந்து ஒரு பெரிய சமுதாயத் தத்துவம் வெளிப்பட்டு நிற்கிறது. மனித வாழ்க்கையின் அத்தனை பிரச்சினைகளும் இந்தத் தத்துவத்தில் நிரம்பி நிற்கின்றன; மனிதனுக்கு நம்பிக்கையூட்டி நிமிர்ந்து நிற்கச்செய்கின்றன; அதர்மத்தையும் தீயோரையும் எதிர்த்து நிற்க நம்மைத் துரண்டுகின்றன. இந்த நம்பிக்கை ஒளி ஆழ்வார்களின் பாசுரங்கள் அனைத்திலும் அடிநாதமாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

திருப்பாவைப் பாசுரங்கள் என்பவை அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை பாடிய சங்கத்தமிழ் மாலை முப்பதாகக் கோக்கப்பட்டவையாகும். திருப்பாவைப் பாசுரங்கள், பக்திச் சுவையும் இனிமையும் ஈடுபாடும், உயர்ந்த மனிதாபிமான உணர்வும் உயர்வும் கொண்டவைகளாகும். கோதைப் பிராட்டியார் உலகத் தோருக்கெல்லாம் வழிகாட்டியாகத் தமது பக்திப்பாடல்கள்ல் மிக அரிய கருத்துகளைப் பதித்துள்ளார்கள். அவ்வினிய பாசுரங்கள் மார்கழித் திங்களில் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் பாடுவதற்கும் பாடி மகிழ்வதற்கும் இனிய பாசுரங்களாகும். அபூர்வமான இசையும் ராகமும் தாளமும் இணைந்த, மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும், உள்ளத்தை நெகிழ வைக்கும் பாசுரங்களாகும்.

“வையத்து வாழ்விர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி நெய்யுண்னோம் பாலுண்னோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்”

என்று ஆண்டாள் பாடுகிறார்.

உலகத்தில் வாழும் மக்களையெல்லாம் "வையத்து

வாழ்விர்காள்” என்று அறைகூவி அழைத்து, நாள்தோறும்

அதிகாலையில் நீராடி, நெய்யும் பாலும் உண்பதைத்