பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

மிகவும் அருமையான கருத்துகளைக் கொண்ட பாசுர அடிகளை அவைகளில் நாம் காண முடிகிறது. சமுதாயக் கருத்துகளைக் கொண்ட அந்த அடிகள் உருக்கம் நிறைந்தனவாகக் காணப்படுகின்றன.

பெற்ற தாய் கோபத்துடன் குழந்தையை அடித்தாலும் அந்தக் குழந்தை, தாயின் அன்பிற்கும் அருளுக்குமாக அழுதுகொண்டே தன் தாயின் பின் செல்லும்.

"அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே யழும்குழவி என்று பாடுகிறார்.

கொண்டவன் தன்னை எவ்வளவுதான் குறை கூறி மற்றவர் இகழும்படி செய்தாலும், குலமகள் தனது கொண்டவனை யல்லாமல் வேறு யாரையும் அறியாள் என்று 'கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள் போல்" என ஆழ்வார் பாடுகிறார்.

அரசன் பல கொடுமைகளைத் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்டாலும் அவ்வரசனை நம்பியே குடிமக்கள் வாழ்வதைப் போல என்னும் பொருளில் "தான் நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடிபோல்” என்று ஆழ்வார் பாடுகிறார். தனது புண்களை வாளால் அறுத்துச் சுட்டாலும் நோயாளன் மருத்துவன்மீது மீளாத காதலும் மதிப்பும் கொண்டிருப்பதைப் போல என்னும் பொருளில் "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல” என்று ஆழ்வார் பாடுகிறார்.

கரை காண முடியாத பறவை, கடலில் காணும் கப்பலின் பாய்மரத்தின்மீது வந்து அமர்வதைப் போல என்னும் பொருளில், “எங்கும்போய் கரைகானா தெறிகடல்வாய் பtண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாம்பறவை போல்” என்று ஆழ்வார் பாடுகிறார்.