பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 111

மனிதனுக்குப் பசி, பிணி, துன்பம், மூப்பு நீங்கவேண்டும் என்று பாடுகிறார். H.

"வேதநூல் பிராயம் நூறு

மணிசர்தாம் புகுவ ரேலும் பாதியும் உறங்கிப் போகும்

நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும்

பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன்

அரங்கமா நகரு ளானே !” . .ன்று பாடுகிறார்.

திருவரங்கத்தானை வழிபடுவோர் யாவராயினும் அவர்கள் அனைவரும் ஒர் குலம், அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் எடுத்துக் கூறியும், அத்திருவரங்கத் தானை வழிபட்டால் நமது தீவினைகள் போகும், எல்லா நலன்களும் கிட்டும் என்றெல்லாம் பாடுகிறார்.

"பழுதிலா ஒழுக லாற்றுப்

பலசதுப் பேதி மார்கள் இழிகுலத் தவர்க ளேனும்

எம்மடி யார்க ளாகில் தொழுமின்நீர் கொடுமின் கொள்மின்"

என்றும்,

"திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்

தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள்நடந்துஇவ் வேழுலகத் தவர்பணிய வானோர்

அமர்ந்தேத்த இருந்தவிடம்" என்றும் உளமுருகப் பாடி மக்களுக்கெல்லாம் அறிவுரை கறுகிறார்.

பொய்க்கருத்துகளை மனத்திலிருந்து அகற்றவேண்டும் என்றும், ஐந்து புலன்களையும் நெறிப்படுத்தி மெய்யான நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்

மெய்ஞ்ஞானக் கருத்தில்,