பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 115

"வெள்ளியார், பிண்டியார், போதியார்

என்றிவர் ஒது கின்ற கள்ளநூல் தன்னையும் கருமமன்று

என்றுப்யக் கருதி னாயேல்" . .ன்றெல்லாம் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே என்று நெஞ்சுருகப் பாடி அனைவருக்கும் அறிவுரை ... றி வழி காட்டுகிறார்.

நம்மாழ்வார் மிகவும் புகழ்மிக்க ஆழ்வாராவார். அவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரங்கள்

யுள்ளார். "களிப்பும் கவர்வும் மற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்பற்று

ஒளிக்கொண்ட சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ?” . .ன்று அவர் பாடுகிறார். மேலும் அவர்,

"கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளவில ராகில் சார்வது சதிரே” என்று தொடங்கி, "சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது” என்றும், "பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே என்றும், "கருமவன் பாசம் கழிந்துழன்று உய்யவே, திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது” என்றும், "கிறியென நினைபமின், கீழ்மை செய்யாதே" எனவும், “நலமென நினை மின்' என்றும், “வலம் செய்து ைவக ல், வலங்கழியாதே' என்றும், “வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது” எனவும், "சூதென்று களவும் குதும் செய்யாதே" என்றெல்லாம் பாடி, திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியுள்ள எம்பிரானை வணங்கி

ஆராதிக்குமாறு நம்மாழ்வார் பெருமான் கூறுகிறார்.

இளமை, செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை பற்றிச் சிலப்பதிகாரக் காப்பியம் மிக வலுவான கருத்துகளை முன்வைத்திருப்பதைக் காண்கிறோம். இக்கருத்துகள் புத்த சமணத் தத்துவஞானக் கருத்துகளைச் சார்ந்தவை. இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் சகல விதமான பொருள்களும் அவைகளின் காட்சிகளும் நிலையானவையல்ல; அவை இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கின்றன என்னும் தத்துவ