பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

ஞான நிலையிலிருந்து இளமை செல்வம் யாக்கை ஆகியவைகளின் நிலையாமைக் கருத்து முடிவுகளைக் சமணமும் புத்தமும் வலியுறுத்தியுள்ளன.

அந்த நிலையிலிருந்து சில புத்த சமணப் பிரிவினர். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொய்யானவை. எல்லாக் காட்சிகளும் மாயத் தோற்றங்களேயாகும் என்னும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டு. அத்துறவுக்கு முதலிடம் கொடுத்தனர். அடுத்த காலத்தில் புத்தமும் சமணமும் துறவுக்கும், துறவிகளின் மடங்களுக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுத்து விட்டன.

ஆழ்வார்களும் நிலையாமைபற்றிப் பல பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சகல விதமான பொருள்களும் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டும், மாறிக்கொண்டும், பழைய நிலை நீங்கிப் புதிய நிலை அடைந்துகொண்டும் இருக்கின்றன என்னும் தத்துவ நிலையிலிருந்து நிலையாமைக் கொள்கை உருவாகிப் பல வடிவம் பெற்றது.

ஆழ்வார்களும் இந்தக் கொள்கையைப் பயன்படுத்தி உலகை நல்வழிப்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்கள்; அரசர்களையும் ஆட்சிமுறைகளையும் நல்வழிப்படுத்தவும் முயன்றிருக்கிறார்கள். நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் "ஒரு நாயகம்" என்று தொடங்கும் பாசுரங்களில் இக்கருத்துகளை முன்வைத்திருப்பதைக் காணலாம். "ஒருநா யகமாய் ஒட உலகுடன் ஆண்டவர்

கருநாப் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்" "உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுஉல காண்டவர் இம்மையே

தம்மின் சுவைமட வாரைப் பிறர்கொள்ளத் தாம்விட்டு வெம்மின் ஒளிவெயில் கானகம் போய்க்குமை தின்பார்கள்"

என்றும்,

"அடிசேர் முடியின ராகி யரசர்கள் தாம்தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத் தியம்ப இருந்தவர் பொடிசேர் துகளாய்ப் போவார்கள்"

என்றும்,