பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐம்புலன்கள். இவைபற்றியும், இவைகளினால் உணரப்படும் புலனறிவு பற்றியும், வள்ளுவரும் இளங்கோவடிகளும் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள்; ஆழ்வார்களும் நாயன்மார்களும் குறிப்பிடுகிறார்கள். ஐம்புலனறிவே அறிவு வளர்ச்சியின் ஆதாரம் அறிவுத் தத்துவத்தின் அடிப்படை. ஐம்புலன்கள் மூலம் மனிதனுக்கு அறிவும், அதன்மூலம் இன்பமும் கிடைக்கின்றன. அவ்வின்பங்களின் நுகர்வு ஒர் அளவுக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அவை அளவை மீறினால் மனிதனைக் கெடுத்துவிடும். அவ்வின்பங்களைக் கட்டுப்படுத்த மனிதன் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும். மனிதன் தனது வாழ்வில் மனித மேம்பாட்டிற்காகத் தனது குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும். ஆழ்வார்கள் அதற்காகப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தினார்கள். பெருமாளுக்குச் சகலவிதமான கல்யாண குணங்களையும் காணிக்கையாகச் செலுத்திப் பரவசப்பட்டார்கள்; உலக நன்மையை வேண்டினார்கள்.

மக்களிடத்தில் பக்தி எழுச்சி ஏற்பட்டுத் தொண்டர் கூட்டம் பெருகும்போது, உலகில் துன்பங்கள் நீங்கித் தொல்லைகள் தொலைந்து இன்பங்கள் பெருகுவதாக ஆழ்வார்கள் கணித்து, மகிழ்ச்சிப் பொங்கப் பாடி நம்மையும் அம்மகிழ்ச்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.

"பொலிக, பொலிக, பொலிக,

போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நரகமும் நைந்த

நமனுக்கிங் கியாதொன்று மில்லை கலியும் கெடும்கண்டு கொள்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்திசை பாடி

யாடி யுழிதரக் கண்டோம்"

என்றும்,