பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

ஆண்டவனை - கடவுளை - எந்த வடிவத்திலும் எந்த முறையிலும் தொழலாம் என்னும் கருத்தில்

"அவரவர் தாம்தாம் அறிந்தவா றேத்தி

இவரிவர் எம்பெருமான் என்று - அவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” என்று ஒரு முடிவும் கூறுகிறார்,

"குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்

இன்று முதலாக என்நெஞ்சே - என்றும் புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித் திரு” என்றும்,

"மனமாசு தீரும், அருவினையும் சாரா

தனமாய தானேகை கூடும் - புனமேய பூந்துழா யான்அடிக்கே போதொடு நீரேந்சி தாம்தொழா நிற்பார் தமர்” என்றும்,

“அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்

மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண்அழிய முன்னொருநாள் தன்வில்அங்கை வைத்தான் சரண்” குன்றனைய குற்றங்கள் நிறைந்திருந்தாலும் அவை திர்ந்துவிடும், நல்ல குணங்கள் சேரும், மனமாசுகள் திரும், திவினைகள் சாரா, அனைத்துச் செல்வங்களும் சேரும், ஏற்கனவே நாம் அடைந்திருந்த தீவினைகளும் அல்லல்களும் நோய்களும் பாவங்களும் இதர தொல்லைகளும் நீங்கும், நாம் நாராயணனைச் சரணடைந்தால் என்று ஆழ்வார் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

"நயவேன் பிறர்பொருளை, நள்ளேன்கீ ழாரோடு உயவேன் உயர்ந்தவரோ டல்லால் - வியவேன் திருமாலை யல்லது தெய்வம்என் றேத்தேன் வருமாறென் நம்மேல் விளை" பிறர் பொருள்களை விரும்பேன், கீழோரோடு சேர மாட்டேன், உயர்ந்தவரோடு மட்டுமே சேர்ந்து இருப்பேன் என்று கூறுகிறார்.