பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பிணிமூப்பு இல்லாமை, ஆட்சி அதிகாரம், அதற்கான வாய்ப்புகள் ஆகியவைகளெல்லாம் ஆழ்வாருடைய பாடல்களில் வெளிப்படுகின்றன.

பூதத்தாழ்வார்

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நாள்" என்று ஆழ்வார் தமது உணர்வு உயிருடன் இணைந்து அன்பையே தகளியாகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், எண்ணங்களையே திரியாகவும் ஞானச்சுடர் விளக்கை நாராயனப்பெருமாளுக்கு எனது ஞானத்தமிழ்ப் பாடல்களால் ஏற்றிப் போற்றினேன் என்று கூறுகிறார். பக்தி வழியில் இங்கு பூதத்தாழ்வார் மிகச்சிறந்த முன்னுதாரண மாகத் திகழ்கிறார்.

"பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை

வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ - வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும் காரணங்கள் தாமுடையார் தாம்” என்றும்,

"அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றிப்

பெருக முயல்வாரைப் பெற்றால் - கரியதோர் வெண்கோட்டு மால்யானை வென்றி முடித்தன்றே தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து" என்றும், இன்னும்,

"தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்” என்றும்,

"பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்துஅம் கோல்தேடி யோடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்" என்றும்,